உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தியில் இளஞ்சிவப்பு நிற கல்லில் ராமர் கோவில்

அயோத்தியில் இளஞ்சிவப்பு நிற கல்லில் ராமர் கோவில்

 அயோத்தி: அயோத்தியில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைதொடர்ந்து ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

மத்திய அரசு அமைத்த ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இந்த கோவிலை கட்டி வருகிறது.இந்நிலையில் ராமர் கோவில் கட்டுமானம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஒரு மூத்த அதிகாரி கூறியதாவது:கடந்த மாதம் ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர்கள், ஆலோசனை நடத்தினர். அப்போது வரும் 2023ம் ஆண்டு இந்த கோவில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவில் கட்டுமானங்கள், பான்சி பஹார்பூர் கல்லினால் கட்டப்பட உள்ளது.

இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த கல், ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் ஸ்டீல் பயன்படுத்தப்படாது. கோவிலின் மதில் சுவர்,ஜோத்பூரிலிருந்து வரவழைக்கப்படும் கல்லினால் கட்டமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !