வீரபக்த ஜெய ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1820 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகம் தச்சம்பத்தில் ஸ்ரீ வீரபக்த ஜெய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.செப்.,14 முதல்கால யாக பூஜை துவங்கி வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. காலை 2ம் கால யாகசாலை, கோ பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார் பிரகாஷ் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.