பழநி கோயிலில் ரூ. 1.11 கோடி வசூல்!
ADDED :4875 days ago
பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல் ரூபாய் ஒரு கோடியே 11 லட்சத்தை எட்டியது. உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. அதில் ரொக்கம் ரூபாய் ஒரு கோடியே 10 லட்சத்து 62 ஆயிரத்து 360. தங்கம் 731 கிராம். வெள்ளி 6 ஆயிரத்து 80 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் 381. தங்கத்தால் ஆன வேல், திருமாங்கல்யம், நாணயம், வெள்ளியால் ஆன வேல், வீடு, ஊஞ்சல், ஆள்ரூபம் உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் திறப்பின் போது இணை கமிஷனர் பாஸ்கரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் (மதுரை) ராஜமாணிக்கம் உடன் இருந்தனர். உண்டியல் எண்ணிக்கை இன்றும் நடைபெறும்.