புரட்டாசி சனி தரிசனம் ரத்து: கோவில் முன் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
ADDED :1488 days ago
கடலூர் : கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை கொரோனா பரவலை தடுப்பதற்காக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து, செய்யப்பட்டுள்ளது. கோவில் நடை அடைக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலின் முன்பு தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் அருகில் உள்ள கெடிலம் நதிக்கரையில் மொட்டை போட்டுக் கொண்டனர்.