விஸ்வகர்மா ஜெயந்தி விழா
ADDED :1478 days ago
அவிநாசி: அவிநாசி விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் தொழிலாளர் குடும்ப ஒற்றுமை விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, ஹோம பூஜை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், தமிழ்நாடு விஸ்வகர்மா அறங்காவலர் குழு அமைப்பு சார்பில், திருப்பூர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.