உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை கோவில்களில் பவுர்ணமி பூஜை

வால்பாறை கோவில்களில் பவுர்ணமி பூஜை

 வால்பாறை: வால்பாறையிலுள்ள கோவில்களில், புரட்டாசி பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.புரட்டாசி மாத பவுர்ணமி நாளான நேற்று, வால்பாறை வாழைத்தோட்டம் காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று காலை, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல், பூ மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில், துர்க்கை அம்மன், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன், அண்ணாநகர் முத்துமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், புரட்டாசி பவுர்ணமி நாளான நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !