உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்காமம் கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம்

கதிர்காமம் கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம்

புதுச்சேரி : கதிர்காமம் கதிர்வேல் சாமி கோவிலில், கவர்னர் தமிழிசை சுவாமி தரிசனம் செய்தார்.

கதிர்காமம் வீமன் நகரில் பிரசித்தி பெற்ற கதிர்வேல் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு, கவர்னர் தமிழிசை, தனது கணவருடன் நேற்றிரவு 8:30 மணியளவில் வந்தார். கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, அருகிலுள்ள அம்மன் கோவிலில், கவர்னர் சுவாமி தரிசனம் செய்தார். எம்.எல்.ஏ., ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !