ஆவணிப்பூர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4933 days ago
மரக்காணம்: ஆவணிப்பூர் ஆறவட்டமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 23ம் தேதி கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி பஞ்சபாலிகை பூஜை நடந்தது. தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 9.45 மணிக்கு முருக்கேரி சீனுவாச குருக்கள் தலைமை தாங்கி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தார். மூலவர் ஆறவட்டமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். இரவு சாமி வீதியுலா நடந்தது.