திரிநேத்திர தசபுஜ வக்ர காளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்
ADDED :1540 days ago
கோவை: கோவை திரிநேத்திர தசபுஜ வக்ர காளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம் மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. கோவை, அகர்வால் பள்ளி ரோடு, தடாகம் ரோட்டில் பிரசித்தி பெற்ற திரிநேத்திர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவசண்டி ஹோமம், மகா பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து சுமங்கலி பூஜை நடந்தது. இதில் கோவை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இந்த கோயிலில் பல்வேறு பரிகார பூஜைகள் நடக்கின்றன. இது குறித்து மேலும் விவரங்கள் அறிய விரும்புபவர்கள் ஞானசேகர சிவாச்சாரியாரை 93632–00801 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.