பரமக்குடி கோயில் நிலம் 24.19 ஏக்கர் மீட்பு : அறநிலையத்துறை நடவடிக்கை
ADDED :1488 days ago
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் காட்டுப்பரமக்குடியில் திருவேட்டுடைய அய்யனார் கோயிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள 24.19 ஏக்கர் நிலத்தை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.
காமெடி நடிகர் வடிவேலுவின் குலதெய்வக் கோயிலான இக் கோயிலுக்கு சொந்தமான நிலம் 24.19 ஏக்கர் நிலம் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேத்துாரில் தனியாரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.ஹிந்து சமய அறநிலையத்துறை பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில், நிலம் அளவீடு செய்யும் ரோவர் இயந்திரம் மூலம் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்நிலம் நிலம் மீட்கப்பட்டது. அறநிலையத் துறை ஆய்வாளர் முருகானந்தம், சேத்தூர் வி.ஏ.ஓ., சந்திரசேகர், பரமக்குடி, திண்டுக்கல் நில அளவை அதிகாரிகள், கோயில் பூசாரிகள் அண்ணாதுரை, தங்கமணி மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.