உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு

5 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு

 பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், காட்டு பரமக்குடியில் திருவேட்டுடைய அய்யனார் கோவில் அமைந்துஉள்ளது. காமெடி நடிகர் வடிவேலுவின் குலதெய்வமான இக்கோவிலுக்கு சொந்தமான 24.19 ஏக்கர் நிலம், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே, சேத்துாரில் தனியாரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அறநிலையத் துறை பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில், நிலம் அளவீடு செய்யும் ரோவர் இயந்திரம் மூலம் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்நிலம் நேற்று மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய்.

 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !