விமர்சனத்தை வரவேற்போம்
ADDED :1506 days ago
இங்கிலாந்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின், குரங்கின் வழியாக மனிதன் தோன்றினான் என்ற பரிணாமத் தத்துவத்தை சொன்னார். அவரை கேலி செய்ய விரும்பிய ஒருவர், ‘‘உங்களது தோற்றத்தை வைத்துதானே இந்த தத்துவத்தை சொன்னீர்கள்’’ என டார்வினிடம் கேட்டார்.
‘‘சரியாக சொன்னீர்கள். எனது தத்துவத்துக்கு நானே எடுத்துக்காட்டாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார் டார்வின். இதைக்கேட்டவர் அவமானம் தாங்காமல் தலை குனிந்தார்.
பார்த்தீர்களா... தன் மேல் விழுந்த விமர்சனத்தை எப்படி நிறையாக மாற்றினார் என்பதை. இதுபோல் நீங்களும் விமர்சனத்தை வரவேற்க கற்றுக் கொள்ளுங்கள்.