கோயில் இடத்தில் கடை, வீடுகள்; பட்டா வழங்க கோரி மனு
ADDED :1482 days ago
கம்பம் : கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் இடங்களில் கடை, வீடு வைத்திருப்போருக்கு பட்டா வழங்க கோரி செயல்அலுவலரிடம் மனு வழங்கினர்.
கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் நிலம் 10 ஏக்கர் உள்ளது. கோயில் நிலத்தில் நுாற்றுக்ககணக்கில் கடைகள், வீடுகள் உள்ளன. அவற்றில் குடியிருப்போர் நேற்று செயல்அலுவலர் போத்தி செல்வியிடம் மனு வழங்கினர். அதில், குடியிருப்போரின் பெயரை, கோயில் பதிவேடுகளில் பதிவு செய்யவும், வீடு, கடைகள் பராமரிப்பு பணி செய்ய அனுமதிக்க வேண்டும். தரை வாடகை எவ்வளவு வசூலிக்கலாம், வாடகை ரசீதில் உரிய நாட்களை குறிப்பிட்டு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம் போக்கு நிலங்களில், கோயில் புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டா வழங்க கோரினர்.