உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் விழா

முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் விழா

கடலாடி: கடலாடி முத்தாலம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது. மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலையில் முத்தாலம்மன் கோயிலில் இருந்து பத்திரகாளியம்மன் கோயில், பஜார் வரை சென்று மீண்டும் கோயில் வரை 108 பால்குட ஊர்வலம் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜையும், அன்னதானமும் நடந்தது. பூஜைகளை பூஜகர் கூரியைய்யா செய்திருந்தார். ஏற்பாடுகளை நன்குடி வெள்ளாளர் உறவின் முறை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !