எல்லையம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED :1541 days ago
புதுச்சேரி : எல்லையம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முதல் வரும் 14ம் தேதி வரை சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறுகிறது.
புதுச்சேரி, எல்லையம்மன் கோவிலில், இன்று 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெற உள்ளது.அதில், உலக நன்மை வேண்டி தினசரி காலை 9:00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷே கம், தீபாராதனை நடக்கிறது.சகஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்க விரும்பு வோர், கோவிலில் கட்ட ணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 15ம் தேதி மாலை அம்பு எய்தல் விழா நடக்கிறது.இத்தகவலை கோவில் தனி அதிகாரி சரவணபெருமாள் தெரிவித்துள்ளார்.