உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அம்மனுக்கு காப்பு கட்டுதல்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அம்மனுக்கு காப்பு கட்டுதல்

 ராமேஸ்வரம், : நவராத்திரி விழாவை யொட்டி இன்று (அக்.,6) ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்வுடன் விழா துவங்குகிறது. விஜயதசமியான அக்.,15 வரை பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி அருகில் அம்மன் தினமும் அன்னபூரணி, சிவதுர்கா, சரஸ்வதி, லெட்சுமி, உள்ளிட்ட பல அலங்காரத்தில் காட்சியளிப்பார்.மேலும் பக்தர்களுக்காக அம்மன் சன்னதி அருகில் 500க்கு மேலான அலங்கார கொலு பொம்மைகள் வைக்கப்படும். ஏராளமானோர் தரிசிப்பர். ராமேஸ்வரத்தில் பல வீடுகளில் நவராத்திரி விழா அலங்கார கொலு பொம்மைகள் வைத்து, தினமும் பூஜை செய்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !