உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கியது.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இக்கோவிலில் நவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்து பிரதமை திதியில், நவராத்திரி துவங்கி, தசமி திதி வரை இந்த வைபவம் நடைபெறும். முதல் நாள் அரங்கநாத பெருமாள் கோவிலில், ரங்கநாயகி தாயார் சன்னதியில், விஷ்வக்சேனர் பூஜை புண்ணியாக வாசனம், நவகலச ஆவாகனம் நடைபெற்று, மூலவர் மற்றும் உற்சவர் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மஞ்சள் மற்றும் சிவப்பு பட்டு சேலை உடுத்தி வளாகத்தில் உற்சவர் ரங்கநாயகி தாயார், வலம் வந்தார். அதைத் தொடர்ந்து வேதமந்திரம் உபநிஷத் லட்சுமி அஷ்டோத்திரம் உள்ளிட்டவை நடந்தது. வாகன மண்டபத்தில் உள்ள குதிரை வாகனத்திற்கு பூஜை செய்து, கங்கணம் கட்டப்பட்டது. இந்த நவராத்திரி நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !