சிந்திக்க வைக்கும் சிற்பம்
ADDED :1492 days ago
மகாராஷ்டிராவிலுள்ள நாசிக் அருகிலுள்ள திரியம்பக் என்னும் ஜோதிர்லிங்கத்தலம் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் அன்னத்தின் மீதமர்ந்த சரஸ்வதி சிற்பம் உள்ளது. அன்னம் வெள்ளை நிறம் கொண்டது. சரஸ்வதியும் வெள்ளைப் புடவையே அணிந்திருக்கிறாள். வெள்ளை உள்ளம் கொண்டவர்களாக கல்வியாளர்கள் பண்புடன் வாழ வேண்டும் என்னும் சிந்தனையை ஏற்படுத்துகிறது. நான்கு கைகளில் வீணை, ஜபமாலை, சுவடிகள் உள்ளன. அருகில் இரு சேவகர்கள் வெண்சாமரம் வீசியபடி நிற்கின்றனர்.