நல்ல புத்தி அளிப்பவள்
ADDED :1538 days ago
அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் ஞான சரஸ்வதி சன்னதி உள்ளது. பத்மாசனத்தில் அமர்ந்த இவள் ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டியபடி ‛சூசி’ முத்திரை’ யுடன் இருக்கிறாள். ‛கடவுளைப் பற்றி அறியும் அறிவே மேலானது’ என்பது இதன் பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணுால், கைகளில் ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என கலைநயத்துடன் இருக்கும் இந்த சரஸ்வதியை வழிபட்டால் நல்லபுத்தி, ஆன்மிக ஞானம் கிடைக்கும்.