கவுண்டம்பாளையம் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :1539 days ago
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலில் நவராத்திரியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. கவுண்டம்பாளையம் பி அன்ட் டி காலனி, பாபா நகரில் அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி அம்மன் ஆலயம் உள்ளது. நவராத்திரி ஆறாம் நாளான நேற்று இக்கோயிலில் அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி அம்மன், உக்ரகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி பார்வதி அம்மாள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.