தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி ஏழாம் நாள் நிகழ்ச்சி
ADDED :1463 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர், நகர மையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி ஏழாம் நாள் நிகழ்ச்சியில் குருதேவரின் ஆரதிக்கு முன்பு அம்பிகையின் அளவற்ற அருள் என்ற தலைப்பில் சைவ சித்தாந்த பண்டிதர் திரு ஜெயபால் அவர்கள் உரையாற்றினார். பிறகு திருவையாறு அரசு இசைக் கல்லூரி மாணவ மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மையத்தில் குழந்தைகள் உட்பட அனைவரும் குங்கும அர்ச்சனை செய்தனர். தன் பிறகு வேளாண்மைச் செம்மல் திரு கோ. சித்தர் அவர்கள் குழந்தைகளும் பாராட்டும் வண்ணம் இயற்கை அன்னையின் மகிமையைப் பற்றி உரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சுவாமி விமூர்த்தானந்தர் செய்திருந்தார்.