சக்தி விநாயகர் கோவிலில் கஜலக்ஷ்மி அலங்காரத்தில் துர்க்கை அம்மன்
ADDED :1537 days ago
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகேயுள்ள வேம்பார்பட்டி அருள்மிகு சக்தி விநாயகர் கோவிலில் நவராத்திரி ஏழாவது நாளை முன்னிட்டு துர்க்கை அம்மன் கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் நவராத்திரி தொடக்கத்திலிருந்து ஒன்பது படிகளுடன் கொலு பொம்மைகள் வைத்து கொளு முன்பாக தினசரி பெண்கள் மற்றும் பொதுமக்கள் பஜனை பாடினர். பின்னர் அனைவருக்கும் சுண்டல் மற்றும் கொழுக்கட்டை பிரசாதங்கள் வழங்கப்பட்டன.