உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயதசமி : பாலக்காடு கோவில்களில் வித்யாரம்பம் நடந்தது

விஜயதசமி : பாலக்காடு கோவில்களில் வித்யாரம்பம் நடந்தது

பாலக்காடு: விஜயதசமி நாளான இன்று கொரோனா குற்றத்தடுப்பு நெறிமுறைகளின் அடிப்படையில், பாலக்காட்டில் உள்ள பல கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கல்லேகுளங்கரை பகவதி அம்மன், யாக்கரை மனபுள்ளிக்காவு பகவதி அம்மன், கொடுந்திரப்புள்ளி கிராமம் ஸ்ரீ பெருமாள், புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் உட்பட கோவில்களிலும் சித்தூர் தெற்கு கிராமம் துஞ்சத்தெழுச்சன் குருமடத்திலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் விதமாக, பெற்றோர் மடியில் அமர வைத்து குழந்தைகளின் நாக்கில், தங்க மோதிரத்தால் அட்சரம் எழுதப்பட்டது.

அதன் பின், ஓம் ஹரி ஸ்ரீ கணபதியே நம என, குழந்தைகளின் கையை பிடித்து பச்சரிசியில் எழுத வைத்து எழுத்தறிவு துவங்கப்பட்டது. முன்னதாக நடந்த நவராத்திரி திருவிழாவும் மாவட்டத்தின் பல கோவில்களில் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. கொடுத்திரப்புள்ளி கிராமம் ஸ்ரீ பெருமாள் கோவிலில் விழாவையொட்டி செண்டை மேளம் முழங்க மூன்று யானைகளின் அணி வகுப்புடன் மூவர் எழுந்தருளும் நிகழ்ச்சியும் பலவேறு சிறப்பு பூஜைகளும் நடைபெறறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !