பாலக்காட்டில் காஞ்சி காமகோடி பீடம் வேத அனுஷ்டான கேந்திரம்
ADDED :1450 days ago
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் கல்பாத்தி சாத்தபுரக்கில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வேத அனுஷ்டான கேந்திரம் வித்யாரம்ப நாளான நேற்று தொடங்கப்பட்டன. துவக்க விழாவை காஞ்சி சேவா சமிதி அறக்கட்டளை மாவட்ட தலைவர் ராமச்சந்திரா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். முரளி தலைமை வகித்தார். டிரஸ்ட் உறுப்பினர் வழக்கறிஞர் பிரசாத், ராமசுப்பிரமணியம், பிரகாஷ் முத்துசாமி ஆகியோர் கலந்து உரையாற்றினர். ரமேஷ் திராவிடன் தலைமையில் தினமும் மாலையில் வேதபாட வகுப்பு நடைபெறும்.