ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோயிலில் புஷ்பயாகம்
ADDED :1560 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு கோபால விலாசம் பகல் பத்து மண்டபத்தில் பல்வகை மலர்களால் பூக்கோலமிடபட்டு, சிறப்பு பூஜைகளை ரகுராம பட்டர் செய்தார். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய பெருமாள், ஸ்ரீ தேவி, பூமா தேவியை பக்தர்கள் தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள் செய்தனர். இதனையடுத்து புரட்டாசி பிரம்மோற்சவம் விழாக்கள் நேற்றுடன் நிறைவடைந்தது.