பழனியாண்டவர் கோயிலுக்கு புதிய உற்ஸவர் சிலை
ADDED :1455 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருநகரம் சாலியர் மகாஜன சபைக்கு பாத்தியப்பட்ட பழனியாண்டவர் கோயிலுக்கு புதிய உற்ஸவர் வழங்கும் விழா நடந்தது. ஐம்பொன்னில் செய்யப்பட்ட 2.5 அடி உயரமுள்ள பழனியாண்டவர் உற்ஸவர் சிலையை கார்த்திகை உச்சிகால பூஜை குழுவினர் செய்து தந்துள்ளனர். நிர்வாகிகள் போத்திராஜ், குருசாமி, சிவசுப்பிரமணியம், ராமசாமி, நெசவாளர் காலனி கண்ணன் நேற்று உற்ஸவர் சிலையை வழங்கினர். உற்ஸவர் வீதி உலா வந்து அருள் பாலித்தார்.