சீதப்பட்டீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :1443 days ago
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் சீதப்பட்டீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி, புனிதநீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலையில் இருந்து, கடம் புறப்பாடாகி புவனேஸ்வரி பார்வதி அம்மை உடனாகிய சீதபட்டீஸ்வரர் கோவிலில் உள்ள கற்பக விநாயகர், சிவசுப்ரமணியர், நடராஜ பெருமாள் ஆகிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், ஈசான சிவ மார்த்தாண்டன் கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.