உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கசவனம்பட்டி மௌனகுரு சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

கசவனம்பட்டி மௌனகுரு சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

கன்னிவாடி: கசவனம்பட்டி மௌனகுரு சுவாமி கோயிலில், கும்பாபிஷேகம் நடந்தது.

கன்னிவாடி அருகே கசவனம்பட்டி யில் பிரசித்தி பெற்ற மவுனகுரு சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மூல நட்சத்திரத்தில், குருபூஜை விழா நடைபெறும். இக்கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அக். 25ல் கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவில், தன பூஜை, கோ பூஜை உள்பட நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. விசேஷ வழிபாடுகளுடன் கடம் புறப்பாட்டை தொடர்ந்து, நேற்று கும்பங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவர், உற்சவர், நந்திக்கு, 30 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை, மகேஸ்வர பூஜை, அன்னதானம், சாதுக்களுக்கு வஸ்திர தானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !