அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்ச்சி
ADDED :1473 days ago
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஐப்பசி பூசத்தை முன்னிட்டு சமரச சன்மார்க்க சங்கம் சார்பில், அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அரூர் கோட்ட சன்மார்க்க சங்க பொதுச்செயலாளர் செவ்வேள்முருகன் தலைமை வகித்தார். திருவருட் பிரகாச வள்ளலார் திருவுருவப்பட ஊர்வலம் நடந்தது. மலைப்பாதையில் அமர்ந்துள்ள அடியார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சங்க பொருளாளர் செம்முனி, சாமிநாதன், கோவிந்தராஜன், முருகன்சாமி, பிரபாகரன், ஆசிரியர் சங்கரன், நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.