கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவம் துவக்கம்
ADDED :1515 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 10 நாட்கள் உற்சவம் துவங்கியது.
முதல் நாளான நேற்று முன்தினம் பெருமாள் சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம் செய்து, கோவில் உள்பிரகாரம் வலம் சென்று மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். மணவாள மாமுனிகள் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து 10 நாட்களுக்கு பெருமாள், தாயாருக்கு சாற்றுமுறை, சேவை, ஆராதனம் நடத்தி, விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்கள் மற்றும் 16 வகை மந்திரங்களை வாசித்து உபசார பூஜை செய்து வைக்கப்படுகிறது. தேசிக பட்டர் வழிபாட்டினை செய்து வைக்கிறார்.