கூர்மாவதார கோயில்
ADDED :1471 days ago
மகாவிஷ்ணுவின் அருள் பெற விரும்பிய சுவேத சக்கரவர்த்திக்கு, கூர்ம (ஆமை) அவதார மகிமையை எடுத்துச் சொன்னார் நாரதர். சக்கரவர்த்தியும் வழிபாடு செய்து கூர்மமூர்த்தியின் தரிசனம் பெற்றார். அதனடிப்படையில் எழுந்த கோயில் ஆந்திராவிலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கூர்மம் என்னும் ஊரில் உள்ளது. கருவறையில் ஆமை வடிவில் இருக்கும் சுவாமியின் முன்புறம் திருமண் என்னும் நாமம், பின்பகுதியில் சுதர்சன சக்கரம் உள்ளது. இங்குள்ள ஸ்வேத புஷ்கரணியில் உள்ள ஆமைகளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.