உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் ரத்து

மேல்மலையனுார் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் ரத்து

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், வரும் 4ம் தேதி அமாவாசை ஊஞ்சல்உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், வழக்கம் போல பக்தர்களின் சுவாமி தரிசனம் நடைபெறும். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது. இத்தகவலை, ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !