குன்றத்து கோயிலுக்கு வெள்ளி பல்லக்கு உபயம்
ADDED :1577 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாட்களில் சுவாமி புறப்பாட்டிற்கு வெள்ளி பல்லக்கு உபயமாக வழங்கப்பட்டது. சஷ்டி விழாவில் தினம் மர பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கும். அருப்புக்கோட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பாக ரூ. 17 லட்சம் மதிப்பிலான 26 கிலோ வெள்ளி தகடுகள் பொறுத்தப்பட்ட புதிய மரத்தினாலான பல்லக்கு நேற்று கோயிலுக்கு உபயமாக துணை கமிஷனர் ராமசாமி, அறநியைத்துறை நகை சரிபார்ப்பு துணை கமிஷனர் பொன் சுவாமிதானிடம் வழங்கப்பட்டது.