சத்ய சாய் பிரசாந்தி மந்திரில் 24 மணி நேர அகண்ட பஜனை
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும், நவம்பர் 23 அன்று இவரது அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர்ந்து எங்கும் இல்லாத வகையில் அகண்ட பஜன் என்ற இடைவிடாத 24 மணி நேர பஜனை உலகெங்கிலும் நடைபெறும்.பக்தர் குழுக்கள் மாறி மாறித் தொடர்ந்து இந்த பஜனையை நடத்துவது சிறப்பாகும்.
இந்த ஆண்டு அகண்ட பஜனை இந்திய நேரப்படி நாளை (நவம்பர் 13) சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் நவம்பர் 14, 2021 ஞாயிறு மாலை 6.00 மணி வரை நடைபெறும். அகண்ட பஜனையில் பங்கேற்க: https://www.sathyasai.org/live, https://www.youtube.com/channel/UC5j7MGcyU9wh15gbkvNO3aw என்ற இணைப்பைப் பயன்படுத்தி பக்தர்கள் கலந்து கொண்டு பகவானின் அருளைப்பெறலாம்.