உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி 1,008 சங்காபிஷேகம்

உலக நன்மை வேண்டி 1,008 சங்காபிஷேகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்,  நேற்று நடந்த மூன்றாம் நாள்  தீப திருவிழாவில், உலக நன்மை வேண்டி, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் மூல கருவறை எதிரில் சிறப்பு யாகசாலை அமைத்து, 1,008 சங்கு வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், 1,008 சங்கு மூலம் பூஜை செய்யப்பட்ட புனித நீரை கொண்டு, அருணாசலேஸ்வரருக்கு, உச்சி கால பூஜையில் சிறப்பு  அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !