சிம்மம் : கார்த்திகை ராசி பலன்
மகம்: எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்காத மகம் நட்சத்திரம் அன்பர்களே! இந்த மாதம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து பன்மடங்கு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறையும். நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் திட்டமிட்டபடி சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பும் இணக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள், - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமுடன் படிப்பில் ஈடுபடுவர்.
சந்திராஷ்டமம்: டிச.12
அதிர்ஷ்ட நாள்: நவ. 25, 26
பரிகாரம்: விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டம் நீங்கும்.
பூரம்: எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உடைய பூரம் நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் முடிவு சாதகமாக அமையும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். விரும்பிய இடமாற்றம், பணிமாற்றம் கிடைக்கும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். பெண்கள் அவசியமற்ற சூழ்நிலையில் மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பிய ஆடை, ஆபரணங்களை இஷ்டம் போல வாங்கி மகிழ்வர். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவர். நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்லும் போது உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்: டிச.13
அதிர்ஷ்ட நாள்: நவ. 26, 27
பரிகாரம்: மஹாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வழிபடுவது
நலம் தரும்.
உத்திரம் - 1: குடும்பத்தில் அக்கறை காட்டும் உத்திர நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் கிரக சூழ்நிலை உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மனக்கவலை நீங்கும். வண்டி, வாகனத்தில் செல்லும் போது கூடுதல் எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பண பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெண்களுக்கு எதிர்பாராமல் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது எதிர்கால வளர்ச்சிக்கு துணைநிற்கும். நல்ல நண்பர்களின் உதவியால் எதிர்பாராத நன்மை சேரும்.
சந்திராஷ்டமம்: நவ. 17; டிச.14
அதிர்ஷ்ட நாள்: நவ. 27, 28
பரிகாரம்:
சூரியனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும்.