உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவிலில் முன்பதிவில்லா தரிசனம்

ஷீரடி சாய்பாபா கோவிலில் முன்பதிவில்லா தரிசனம்

ஷீரடி: மஹாராஷ்டிராவின் ஷீரடி சாய்பாபா கோவிலில், முன்பதிவு இல்லாமல் தினசரி 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவல் குறைவதை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்படி அகமது நகர் மாவட்டம் ஷீரடி சாய்பாபா கோவிலில் அக்டோபர் 6ம் தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக தினந்தோறும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்ததாக நேரடியாக வரும் பக்தர்களில், தினசரி 10 ஆயிரம் பேரை தரிசனத்திற்கு அனுமதிப்பது என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆதார் அட்டையை காண்பிக்கும் பக்தர்களுக்கு இலவச அனுமதி டோக்கன் வழங்கும் சிறப்பு கவுன்டர்கள் கோவில் நிர்வாகம் தரப்பில் அமைக்கப்படுகின்றன. ஆன்லைன் முன்பதிவும் தொடரும் என்பதால், நாள்தோறும் 25 ஆயிரம் பக்தர்கள் சாய்பாபாவை தரிசிக்கலாம். இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !