காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :1522 days ago
சித்தூர்: ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 26 நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் பணி 16.11.2021 காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் ஊழியர்களால் கணக்கிடப்ப்பட்டது .இதில் பணமாக ஒரு கோடியே 20 லட்சத்து 12 ஆயிரத்து 549 ரூபாயும் தங்கம் 77 கிராம் வெள்ளி 638 கிலோ மற்றும் வெளிநாட்டு பணம் 183 வந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி ராஜு தெரியப்படுத்தினார்.