குபேர ஐயப்ப சுவாமி கோயிலில் சிறப்பு படிபூஜை
ADDED :1425 days ago
நாகர்கோவில்: பொட்டல்குளம் அய்யன் மலை குபேர ஐயப்ப சுவாமி கோயிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலையில் நடப்பது போன்று சிறப்பு படிபூஜை நடந்தது.
கார்த்திகை 1ம் தேதியான நேற்று அய்யப்ப பக்தர்கள் கோயில்களில் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் தொடங்கினர். குமரியின் சபரிமலை என போற்றப்படும் பொட்டல்குளம் அய்யன் மலை குபேர ஐயப்ப சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பக்தர்களுக்கு சித்தர் தியாகராஜ சுவாமிகள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர். இதனை தொடர்ந்து மாலையில் சபரிமலையில் நடப்பது போன்று 18 படிகளுக்கும் படி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.