மலையடிவாரம் ஐயப்பன் கோயிலில் விரதம் துவங்கிய பக்தர்கள்
திண்டுக்கல்: கார்த்திகை பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கினர்.இதையடுத்து திண்டுக்கல் மலையடிவாரம் ஐயப்பன் கோயிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5:30 மணிக்கு கணபதி ேஹாமம், ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் கொடியேற்றம் நடந்தது. குருசாமியிடம் ஆசி பெற்று சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்தனர். ரயிலடி தெரு ஐயப்பன் மணி மண்டபம், சித்தி விநாயகர், வெள்ளை விநாயகர் கோயில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.பழநி: பழநி மலைக்கோயிலில் ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. பின் கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பெரியாவடையார் கோயில். திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி பெருமாள் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தரிசித்தனர். கார்த்திகை மாதத் துவக்கத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் காட்சியளித்தார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் தொடங்கினர்.