சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் உண்டியல் திறப்பு
ADDED :1448 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுகன்யா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் நகைகள் எண்ணப்பட்டது. இதில் 9 லட்சத்து 84 ஆயிரத்து 158 ரூபாய் ரொக்கமும், 47.250 மில்லி கிராம் தங்கமும், 22 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது.