ஆச்சர்யப்பட்ட அறிஞர்
ADDED :1447 days ago
அறிஞர் ஒருவர் ஒருநாள் முல்லாவிடம் பேசிக்கொண்டிருந்தார். பேசிமுடித்தவுடன் அருகில் உள்ள உணவு விடுதிக்கு சென்றனர்.
‘‘இரண்டு வறுத்த மீனை கொண்டு வாருங்கள்’’ என்றார் முல்லா. அதில் ஒரு மீன் பெரியதாகவும், இன்னொன்று சிறியதாகவும் இருந்தது. பெரிய துண்டை முல்லா எடுத்து கொண்டார். இதைப்பார்த்த அறிஞர், ‘‘நீங்கள் செய்வது நியாயமா’’ எனக்கேட்டார்.
‘‘இந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்’’ என முல்லா கேட்டார்.
‘‘பெரிய துண்டை உங்களுக்கு கொடுத்திருப்பேன்’’ என்றார்.
‘‘அதைத்தானே நான் செய்தேன்’’ என்று சிரித்தார் முல்லா. அவரின் அறிவாற்றலை கண்டு ஆச்சர்யப்பட்டார் அறிஞர்.