குழந்தைகள் நலனுக்காக சிறப்பு ஹோம பூஜை
ADDED :1411 days ago
அவிநாசி:அவிநாசி அருகே குழந்தைகள் நலனுக்காக, சிறப்பு ஹோம பூஜை நடத்தப்பட்டது. அவிநாசி அருகே கருவலுார் - தொட்டக்களம்புதுாரிலுள்ள ஸ்ரீ சங்கர சேவாலயத்தில் உள்ள குழந்தைகள் நலன் வேண்டி, கணபதி ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடத்தப்பட்டது. குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்து வழிபாடும் நடத்தப்பட்டது. நடேச ராஜ்குமார சிவம் தலைமையில் நடந்த இந்த ஹோமத்தின் முடிவில், அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.இதில், சேவாலய நிர்வாகி சிந்துகுமாரி, ஆலோசகர் விஜய நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். ேஹாம பூஜை நிறைவில், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.