உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 27 அடி உயர வேல் பழநி வந்தது

27 அடி உயர வேல் பழநி வந்தது

பழநி: ஹிந்து தமிழ் கட்சி நிறுவனர் தமிழர் ராம ரவிக்குமார் தலைமையில் இருபத்தி ஏழு அடி உயரம் வேல் பழநி வந்தது.திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் 27 அடி உயர வேல் பிரதிஷ்டை செய்ய திருச்செந்தூர்,திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழநி, சுவாமிமலை திருத்தணி என முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு வேல் யாத்திரை கொண்டு செல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக 1800 கிலோ, 27 அடி உயரவேல் நேற்று முன்தினம் இரவு பழநி வந்தடைந்தது. நேற்று காலை பாத விநாயகர் கோயில், குடமுழுக்கு மண்டபம் முன் உள்ள மயில் வாகனம் முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இந்திய நாட்டின் ராணுவ வீரர்களுக்கும் தமிழக காவல்துறைக்கும் மன வலியை ஏற்படுத்தும் இறையருளை வழங்க வேண்டும்எனக் கூறினர். இந்நிகழ்ச்சியில் தமிழக பிராமணர் சங்கத் தலைவர் ஹரிஹர முத்தையர், ஹிந்து தமிழ் கட்சி மாநில குழு உறுப்பினர் மனோஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நவ., 30 அன்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !