உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களை ஆகமவிதிப்படி அதிகாலை திறக்க வலியுறுத்தல்

கோயில்களை ஆகமவிதிப்படி அதிகாலை திறக்க வலியுறுத்தல்

மதுரை: ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களை ஆகமவிதிப்படி அதிகாலை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

மாநில துணை செயலாளர் சந்திரசேகரன் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று குறைந்துள்ளதையடுத்து கோயில்களை வழக்கம் போல திறக்க அரசு உத்தரவிட்டாலும் கூட சில கோயில்கள் முறையாக திறக்கப்படுவதில்லை. ஆகமவிதிகளின்படி அதிகாலை திருப்பள்ளி எழுச்சி பூஜை உள்ளிட்டவை நடக்க வேண்டும். ஆனால் காலை 6:00 மணிக்கு பிறகு கோயில்கள் திறக்கப்படும் அவலம் நிலவுகிறது. தற்போது ஐயப்பபக்தர்கள் அதிகம்வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கருமாத்துாரில் டிச., 12 அருள்வாக்கு அருள்வோர் பேரவை, கிராம கோயில் பூஜாரிகள் பேரவை, வி.எச்.பி., கூட்டு மாநில மாநாடு நடக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !