திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ. 31.83 உண்டியல் வருமானம்
ADDED :1402 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களாக அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி கோயில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில், பழனி ஆண்டவர் கோயில், மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் உண்டியல்கள் நேற்று கோயில் துணை கமிஷனர் ராமசாமி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் ரூ. 31.83, 150, தங்கம் 198 கிராம், வெள்ளி 3 கிலோ 290 கிராம் இருந்தது. அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயன், தக்கார் பிரதிநிதி நாகவேல் கலந்து கொண்டனர். கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயா வேதபாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.