பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை
ADDED :1505 days ago
போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மலர் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை. அபிஷேகம், தீபாரதனை நடந்தது. போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கீழச் சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், பரமசிவன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் நடந்தது.