உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடுகரை கோவிலில் சுதர்சன ஹோமம்

மடுகரை கோவிலில் சுதர்சன ஹோமம்

நெட்டப்பாக்கம்: மடுகரை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை நட்சத்திர வைபவம் மற்றும் சுதர்சன ஹோமம் நடந்தது.இதனையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் பழ வகைகள் கொண்டு சுவாமிக்குத் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரத்துடன் 24 நெய்தீப ஆராதனை நடந்தது. தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை விவசாயத் துறை கூடுதல் இயக்குனர் சுதர்சனம், நிர்வாகக்குழு நித்திய கல்யாணி, ரோகிணி, ஜெயக்குமார், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !