உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப பக்தர்களுக்கு வசதி?: கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

அய்யப்ப பக்தர்களுக்கு வசதி?: கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

கொச்சி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி மாநில அரசுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. இந்தக் காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவர்.பக்தர்களுக்கான வசதிகள் குறித்து சபரிமலை சிறப்பு கமிஷனர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது.அதன்படி நீலிமலை - அப்பச்சிமேடு பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டால் கூடுதல் மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும். கேரள அரசு போக்குவரத்து கழகம் அதிக கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.இந்த இரண்டு பிரச்னைகள் குறித்து தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !