அரவிந்தர் நினைவு தினம்: மலரஞ்சலி
ADDED :1407 days ago
புதுச்சேரி : அரவிந்தர் நினைவு தினத்தையொட்டி, ஆசிர மத்தில் உள்ள அவரது சமாதியில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், 1872ம் ஆண்டு ஆக.15ம் தேதியில் பிறந்த அரவிந்தர், ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, 1910ல் புதுச்சேரி வந்தார்.இங்கு, அரவிந்தர் ஆசிரமத்தை உருவாக்கினார். அவர், 1950ம் ஆண்டு டிச., 5ம் தேதி காலமானார். அவரது 71வது நினைவு தினமான நேற்று, ஆசிர மத்தில் உள்ள அவரது சமாதியில் மலரஞ்சலி செலுத்த, ஏராளமானோர் குவிந்தனர். இரவு 7:00 மணி வரை அவரது சமாதியை தரிசிக்க, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.